புக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

தனிச்சிறப்பு

  • சங்க உறுப்பினர்களுக்கு காலை, மாலை இருவேளையும் அவர்கள் சங்கத்திற்கு வழங்கிய பால் அளவு , தரம் மற்றும் விலை விபரம் தொடர்பான குறுந்தகவல் (SMS) அவர்களது கைபேசி எண்ணிற்கு சங்கத்தின் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
  • 10 நாட்களுக்கு ஒருமுறை , அந்த 10நாட்களில் உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய பால் அளவு மற்றும் தரத்திற்கு உண்டான தொகை விபரம் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களின் கைபேசிக்கு குறுந்தகவலாக சங்கத்தின் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
  • உறுப்பினர்களுக்கு உண்டான பால் பணம் பட்டுவாடா தொகை தனித்தனியாக அவர்களின் பெயர் எழுத்தப்பட்டு கவரில் உரிய இரசீதுகளுடன் இணைத்து மொத்த தொகையும் கவரில் போடப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் உறுப்பினர்கள் தங்கள் வழங்கிய பாலுக்கு உண்டான தொகையினை விபரங்களுடன் காலதாமதமின்றி பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சங்கத்தில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் (5000லிட்டர் கொள்ளளவு) 24.05.2013 முதல் நிறுவப்பட்டு தற்பொழுதுவரை சுமார் 43.00லட்சம் லிட்டர் பால் திறம்பட கையாளப்பட்டு, குளிர்விக்கப்பட்டு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. சங்கத்தில் புதியதாக இணையதளம் நிறுவப்பட்டுள்ளது.
  • www.pukbmc.com என்ற பெயரில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சங்கத்தில் CCTV கேமரா பொருத்தப்பட்டு சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.